பொதுவாகவே ரயிலில் பயணம் செய்யும்போது ரயில்வே போலீசார் காவலுக்கு இருந்தாலும் பயணிகள் பாதுகாப்பாக இருப்பது அவசியம். எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஜன்னல் அருகே அமர்பவர்கள் தங்க செயின் அணிந்து இருந்தால் கவனமாக இருப்பதுஅவசிய ம். செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருந்தாலும் சில அஜாக்கிரதையாக செயல்படுகின்றனர்.
அப்படி ஒரு பெண் அலட்சியமாக இருப்பதை கவனித்த RPF அதிகாரி ரிது ராஜு சவுத்ரி என்பவர் ரியலாக அந்த பெண்ணுக்கு பாடம் கற்பித்துள்ளார். அந்தப் பெண் போனில் மூழ்கி இருக்க அதிகாரி அதை கவனித்து சட்டு என்று போனை பறித்து விட்டார். இதனால் அந்தப் பெண் பயணி அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த அதிகாரி பெண்ணிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
