திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி பகுதியை சேர்ந்த ஜோஸ் மரியா ராகுல் (28) பவர் கடந்த ஆண்டு instagram மூலமாக கல்லூரி மாணவிக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார். பிறகு இருவரும் நட்பாக பழகிய நிலையில் கல்லூரி மாணவி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தாய் தந்த இல்லாத அவர் பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் மாலை வீடும் திருமணம் செய்து கொள்கிறேன், நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று ராகுல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதே சமயம் மாணவியும் ராகுலும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு வீட்டில் சம்மதிப்பார்களா என்று மாணவி கேட்டபோது அனைத்தையும் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராகுல் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை வைகை அணைக்கு வரவழைத்து பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அவரை கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோ எடுத்துக்காட்டி மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாக்குறுதியையும் நிராகரித்து மாணவியை ராகுல் ஏமாற்றி உள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் தலைமறைவாக உள்ள ராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
