கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்திலிருந்து 2 பேர் போதை மாத்திரைகளை வாங்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த அரவிந்த்(19) மற்றும் ராகுல்(22) என்பது தெரியவந்தது.
இருவரும் போதை மாத்திரைகளை 32 ரூபாய்க்கு புனேவில் இருந்து வாங்கி வந்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்கள் கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். மேலும் அதை பொதுமக்களுக்கும் விநியோகம் செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
