மனிதநேயத்தை சிதைக்கும் விதமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற நபர் கடந்த ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் பலாத்காரம் செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் சமீபத்தில் சிசிடிவி காட்சிகளை பரிசீலனை செய்ய போது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவ அதிகாரி புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனையின் பிணவறையில் கிடந்த பெண்ணின் சடலத்தை எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தக் கேவலமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி உள்ளதால் மாநில முழுவதும் பரபரப்பும் எதிர்ப்பும் உருவாகியுள்ளது. மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம் நடந்து உள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
