தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி சமீபத்தில் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூரில் நெரிசல் ஏற்பட காவல்துறை தடியடி நடத்தியதும் காரணம் என்று நீதிமன்றத்தில் கூட்டத்தில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் கூறியுள்ளார். வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரி அவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, கூட்ட நெரிசல் ஏற்படும் என அதிமுகவுக்கு தர மறுத்த இடத்தை தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு காவல்துறை ஒதுக்கியது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் SIT விசாரணையில் உண்மை வெளிவராது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
