வீடியோ அனுப்புறியா, இல்ல இன்டர்னல் மார்க்ல கை வைக்கட்டுமா?… கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்… பரபரப்பை கிளப்பும் ஆடியோ…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் மாதவையா என்ற நபர் கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் இணைந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். நான்கு மாணவிகள் உட்பட 24 பேரை கைது செய்துள்ள நிலையில் இதுவரை விடுவிக்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவரின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். வாட்ஸ் அப்பில் ஆபாசமாக வீடியோக்கள் அனுப்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் இல்லை என்றால் இன்டர்னல் மார்க்கில் கை வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் அந்த மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இது தனது பெற்றோருக்கு தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்றும் கண்ணீரோடு அந்த மாணவி கூறியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.