“வீட்டு வேலை செய்து பணிப்பெண் வாங்கிய பிரமாண்ட வீடு”… வாயடைத்துப் போன எஜமானி… வைரலாகும் பதிவு…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

இன்றைய காலத்தில் இந்தியாவில் வீடு வாங்க வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. விண்ணை மட்டும் விலையில் வீடுகள் உள்ளது. அதற்கு தவணைத்தொகை கட்டுவது, வீட்டின் உள் அலங்காரம் மற்றும் வெளி அலங்காரங்கள் செய்வது என்று கனவு இல்லத்திற்காக கடும் முயற்சி எடுக்க வேண்டி உள்ளது. இப்படியான நிலையில் குஜராத்தில் நளினி உனாகர் என்ற பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், அவருடைய வீட்டு வேலைக்கார பெண் ஒரு நாள் காலை மகிழ்ச்சியுடன் வந்துள்ளார். சூரத்தில் 60 லட்சத்தில் மூன்று படுக்கை அறைகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விளக்கி வந்துள்ளது, அதனை வாங்கி விட்டேன் என்று சாதாரணமாக கூறினார்.

அதுபோக நாற்காலி மற்றும் மேசை என வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு 4 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கெல்லாம் 10 லட்சம் மட்டுமே கடனாக பெற்றேன் என்றும் கூறியுள்ளார். தன் கிராமத்தில் இரண்டு அடுக்குமாடிக்கொண்ட வீடு மற்றும் கடை ஒன்றையும் வாடகைக்கு விட்டிருக்கிறார். இதனைக் கூறிவிட்டு அவர் வேலையை பார்க்க சென்று விட்டார். அதனைக் கேட்டு நளினி அதிர்ந்து போனார். வாயடைத்து போய் அமர்ந்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பணி பெண்ணின் கடின உழைப்பு, திறமையாக சேமித்தல் மற்றும் முதலீடு ஆகியவை அவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த பதிவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். உழைப்பு என்றுமே வீணாகாது என்பதற்கு இந்த பெண் ஒரு சிறந்த உதாரணம்.