ரேஷன் அட்டைதாரர்களே மறந்துராதீங்க… நாளை (அக்..11) காலை 10 – 1 மணி வரை… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் அட்டை என்ற இந்த குடும்ப அட்டையை பயன்படுத்தி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய பல நிதி உதவிகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கிறது. எனவே ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் 11 அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டவருக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.