யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…. தவெகவின் தேர்தல் சின்னம்… விஜய் எடுத்து அதிரடி முடிவு…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார்.

அதே சமயம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா தற்போது தலைமுறைவாக இருப்பதால் கட்சிப் பணிகளை விஜய் தனி ஆளாக நின்று பார்த்து வருகிறார். இனி யாரையும் நம்ப முடியாது தாமே களத்தில் இறங்குவோம் என்று இறங்கி வேலை பார்த்து வருகிறார். இப்படியான நிலையில் தேர்தல் சின்னம் கேட்டு விரைவில் தமிழக வெற்றி கழகம் விண்ணப்பிக்க உள்ளது.

   

கரூர் துயரத்தில் முடங்கி இருந்த விஜய் தற்போது மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்கியுள்ளார். தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பாக சின்னம் கேட்ட விண்ணப்பிக்கலாம் என்பதால் சின்னம் தேர்வில் விஜய் ஈடுபட்டுள்ளார். அதன்படி விசில், ஆட்டோ, பேட், உலக உருண்டை, மைக் ஆகிய சின்னங்களில் மூன்று சின்னங்களை தேர்வு செய்து பரிசீலனைக்காக தேர்தல் கமிஷனுக்கு கட்சி சார்பில் அனுப்பப்பட உள்ளது.