மிரட்டி பணிய வைக்கும் பாஜக… வளைந்து போகும் விஜய்… அடுத்த பரபரப்பை கிளப்பிவிட்ட வேல்முருகன்…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார். அதேசமயம் விஜய்க்கு இந்த விஷயத்தில் ஆதரவாக செயல்பட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விஜயை மிரட்டி பணிய வைத்து தங்களது கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு சினிமா மீதான மக்களின் மோகமும் ஒரு காரணம் என்று அவர் கூறியுள்ளார். அஜித் படுகொலையில் சிபிஐ விசாரணையை கடுமையாக விமர்சித்த விஜய், தற்போது கரூர் துயரில் அதே விசாரணையை கோருவது ஏன் என மேல் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.