“முதலில் சோப்பு தண்ணீரை குடித்தார்… இப்போது…” பேஸ்புக் லைவில் கணவர் செய்த காரியம்…. மனைவியின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

By Devi Ramu on ஐப்பசி 10, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் பாஷாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சையத் நிகாத் பிர்தோஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சல்மான் பாஷா வேலை பார்க்க குவைத்திற்கு சென்ற பிறகு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட ஆரம்பித்தது. பிர்தோஸ் இரண்டாவது குழந்தையை கருத்தரித்த நேரத்தில் சல்மான் குவைத்துக்கு சென்றார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ஊருக்கு வந்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பேஸ்புக் லைவில் சல்மான் தனது குடும்ப பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தபோதே தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சல்மானின் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

பேஸ்புக் லைவ் வீடியோவில், மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை மனரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாக சல்மான் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தனது மனைவி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், வெளிநாட்டிலிருந்து தான் வந்த பிறகு தனது இரண்டு குழந்தைகளையும் பார்க்க விடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

   

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பிர்தோஸ் கூறியதாவது, இதற்கு முன்பே சோப்புத்தன் வரை குடித்து எனது கணவர் பிரச்சினை செய்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து என் மீது ஆசிட் ஊற்றுவதாக கூறினார். அவர் மிரட்டல் பற்றி நான் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளேன். இப்போது அனுதாபத்தை பெறுவதற்காக நாடகம் போடுகிறார் என கூறியுள்ளார். இது விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.