நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் அரண்மனை 3 & 4, அயோக்யா, அடங்கமறு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படம் மட்டுமில்லாமல் வெப் சீரிஸிலும் ராஷி கண்ணா நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷி கண்ணா கூறியதாவது, ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய கதாநாயகியாக சினிமாவில் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பெரிய கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
