சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ரிலீசான கூலி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ஆமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சினிமாவில் நடிகர்கள் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள் வெளியாகும்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை 80-களில் நடித்த நடிகை ஒருவர் ரகசியமாக காதலித்ததாக கூறப்படுகிறது. அது வேறு யாருமில்லை. நடிகை சில்க்ஸ்மிதா தான். அந்த காதல் கிசுகிசுக்கள் வெளியான சமயத்தில் தான் லதாவை ரஜினிகாந்த் திருமணம் செய்துள்ளார். இது உண்மையா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.
