“தலைமைக்கே இங்க தகுதி இல்ல, இதுல CM ஆசை வேற”… விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பெண் நிர்வாகி… பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 9, 2025

Spread the love

தமிழக அரசியல் களம் எப்போதுமே புதிய திருப்பங்களையும் விவாதங்களையும் சந்தித்து வருகின்றது. அதன்படி தற்போது வைஷ்ணவியின் கடுமையான கருத்துக்கள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. விஜய் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக வெற்றி கழகம் மூலமாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய வைஷ்ணவி தற்போது திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகின்றார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் விஜயின் அரசியல் நடைமுறைகளை திறம்பட விமர்சனம் செய்துள்ளார்.

அதில், தன்னை வென்ற ஒருவனால் மட்டுமே தரணியை வெல்ல முடியும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதை குறிப்பிட்ட வைஷ்ணவி, பத்து நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று கூறி மக்கள் அனுதாபம் பெறுவதற்கு விஜய் முயற்சித்து வருவதாக வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் தலைவராக இருக்க வேண்டிய உறுதி, நிலைப்பாடு மற்றும் தொண்டர்களை வழிநடத்தும் திறன் விஜய் இடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

   

ஒரு உண்மையான தலைவன் தன்னை ஒரு நிலைப்பாட்டில் வைத்துக்கொண்டு தொண்டர்களையும் எதிர்கால தலைவர்களையும் வழிநடத்துவார். இங்கு தலைமைக்கே தகுதி இல்லை, முதல்வராக வேண்டுமென்ற ஆசை மட்டுமே நிறைய இருக்கிறது என்று வைஷ்ணவி கடுமையாக விமர்சித்துள்ளார். அவருடைய இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

S VAISHNAVI பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vaishnavi.cbe)