கடந்த 2014 – 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனித்தேர்வுகளாக பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதியவர்கள் சுமார் 2 லட்சம் பேர் இதுவரை மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளாவிட்டால் அவற்றை அழிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மதிப்பெண் சான்றிதழை இதுவரை வாங்காதவர்கள் உடனடியாக கல்வித்துறையை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
