தமிழகத்தில் ஊர்கள், தெருக்கள் மற்றும் குளங்களின் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான் குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை உள்ளிட்ட பெயர்களை நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை வருகின்ற நவம்பர் 19ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
