சலூன் கடைக்குச் சென்ற வடமாநில தொழிலாளி… பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்… இரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 8, 2025

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் பிரசாத் யாதவ் (53) என்பவர் கடந்த சில வருடங்களாக திருச்செந்தூரில் தங்கி அருகே உள்ள அனல் மின் நிலைய கட்டுமான பணியில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று மாலை குலசேகரப்பட்டினத்திற்கு சென்று சேவிங் செய்துவிட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். மாலை நேரத்தில் கடைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவருடைய நண்பர்கள் பல இடங்களில் தேடி அலைந்தனர்.

இதனிடையே இரவு 9 மணிக்கு தான் பணியாற்றும் டெக்ஸ் செல் நிறுவனத்தின் அதிகாரியான ஜெகதீசன் என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அர்ஜுன்”தன்னை அடையாளம் தெரியாத சிலர் அடித்து பணம் கேட்பதாகவும், செல்போன் பாஸ்வேர்டு கேட்பதாகவும்”இந்தியில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஜெகதீசன் மீண்டும் போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. உடனே ஜெகதீசன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல இடங்களில் தேடினர்.

   

அப்போது போலீசாருக்கு டாஸ்மாக் கடையின் பின்புறம் கொலை செய்த உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே தகவல் அறிந்து சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்தது அர்ஜூன் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த முத்துச்செல்வன் (27) மற்றும் மூர்த்தி (27) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் கொலை செய்துவிட்டு ஏன் அவரை எரிக்க வேண்டும் என்று போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.