இப்படி ஒரு அதிர்ஷ்டமா…? ஒரே லாட்டரியில் நனவாகும் 5 பெண்களின் கனவு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

By Devi Ramu on ஐப்பசி 8, 2025

Spread the love

கேரளாவை சேர்ந்த 5 பெண்கள் இணைந்து லாட்டரி சீட்டு வாங்கினர். அந்த லாட்டரி சீட்டுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு விழுந்தது. சௌமியா சுஜித், ரம்யா, உஷா சாலிபாபு, உஷா சாபு ஆகிய 5 பேர் இணைந்து தலா 100 ரூபாய் கொடுத்து பூஞ்சூரில் உள்ள மனோஜ் என்பவரிடமிருந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர்.

அந்த பணத்தை வைத்து தங்களுக்கான சொந்த வீட்டை கட்ட பெண்கள் திட்டமிட்டுள்ளனர். லாட்டரி விழுந்ததால் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற போவதாக பெண்கள் கூறியுள்ளனர்.