சென்னையில் விடுதியில் சிறுமி ஒருவரை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனாதால், அவருடைய தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த அந்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பூங்கோடி அச்சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். ஆரம்பத்தில் இதற்கு மறுத்த அந்த சிறுமி பின்னர் சொகுசு வாழ்க்கை, ஆடம்பரமான பொருட்கள் கிடைத்ததால் அதற்கு ஒத்துழைத்துள்ளார்.
இதற்கு அச்சிறுமியின் பெரியம்மா மகள் ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. பூங்கொடிக்கு வசதி படைத்த வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட இயக்குநரும் ,காமெடி பட நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
