திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கிடங்குகளில் இருந்து தரமான பொருட்கள் அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டது.
தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பாமாயில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் புழல், சூரப்பட்டு பகுதியில் காலாவதியான பாமாயில் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து கிடங்குகளில் ஆய்வு செய்து தரமான பொருட்களை மட்டுமே அனுப்புவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டது.
