காலையிலேயே ஷாக்… டிஜிபி ஆபீஸ் முற்றுகை?… விஜய் எடுத்த திடீர் முடிவு… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அதேசமயம் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிராகவும் சாதகமாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதனிடையே கரூர் சம்பவத்தில் விஜய் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தமிழக வெற்றி கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது கைது நடவடிக்கையை எதிர்கொள்ள விஜய் தயாராக உள்ளாராம். பொதுச் செயலாளர் N. ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு மேல்முறையீட்டில் சாதகமான முடிவு வராத பட்சத்தில் டிஜிபி ஆபீசை முற்றுகையிட்டு தன்னையும் கைது செய்யுங்கள் என்று முறையிட விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.