பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வாறு நடந்துள்ளது பாமக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
