நகை கடன்…. இனி அடகு வைத்த 12 மாதங்களுக்குள்… வந்தது புதிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

நகை கடன் வாங்குபவர்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி நகைக்கடன் வாங்குபவர்கள் இனி அசல் மற்றும் வட்டியை 12 மாதங்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். முன்பு இருந்த வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடனை செலுத்திய உடன் ஏழு வேலை நாட்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை கடன் கொடுத்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.