குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளை பெற்றோர்களுக்கு நினைவூட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறிய பொருட்கள் கூட குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. வியட்நாமில் 6 வயது சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக 2 சென்டிமீட்டர் நீளமுள்ள இதய வடிவ காந்தம் ஒன்றை விழுங்கியுள்ளான். உடனடியாக கவனித்த பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே பரிசோதனையில் காந்தம் சிறுவனின் குடலில் சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
குடலில் துளைகள் அல்லது நெக்ரோசிஸ் ஏற்படும் அபாயம் இருந்ததால் மருத்துவர்கள் அவசரமாக எண்டோஸ்கோபி செய்து அந்த காந்தத்தை சிறுவனின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றினர். சிகிச்சைக்கு பிறகு சிறு வடக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. தற்போது சிறுவன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாகவும் காந்தம் பதுங்காமல் இருந்ததால் உடலில் காயம் அல்லது ரத்தப்போக்கு ஏற்படவில்லை என்றும் சற்று தாமதமாக இருந்தாலும் ஜீரண மண்டலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு நாணயங்கள், பட்டன் பேட்டரியில் மற்றும் காந்தங்கள் போன்ற சிறிய பொருள்கள் எட்டாதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
