கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரம் தொடர்பான வழக்கில் பொதுச் செயலாளர் N. ஆனந்த் மற்றும் CTR நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் முன் ஜாமின் கோரி இருந்த நிலையில் அவர்களுடைய மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைக்குள் கைதாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆதவ் அர்ஜுனா மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளதால் கட்சியின் உயர் பொறுப்பாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.
