பணத்தை திருடி மது குடித்த ஊழியர்…! “அடித்தே கொன்ற முதியவர்….” வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2025

Spread the love

சென்னை மாவட்டம் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த குமார்(46) என்பவர் கேஸ் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி குமார் அப்பகுதியில் உள்ள மழை நீர் வெளியேற்றும் நிலையம் அருகே படுத்துக் கொண்டிருந்தார். அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதை அறிந்த மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது குமார் உயிரிழந்தது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சங்கரிடம் குமார் அடிக்கடி மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பலமுறை அவருக்கு தெரியாமலேயே பணத்தை திருடி மது குடித்துள்ளார். இதனால் கோபத்தில் சங்கர் குமாரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.