அதிமுக ஒருங்கிணைப்பு என்ற விஷயத்தில் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது, செங்கோட்டையன் ஆதரவாளர்களுடைய பதவியை பறித்து, ஏ.கே. செல்வராஜ் ஆதரவாளர்கள் 35 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை கட்சி பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தூக்கிய நிலையில், தற்போது புதிய அறிவிப்பை எடப்பாடி வெளியிட்டுள்ளார்.
