ஆயுத பூஜைக்கு கம்பெனி கொடுத்த பரிசு… ஆனந்தத்தில் அறைக்கு சென்ற வடமாநில இளைஞர்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தட்டான்குளம் ரோடு அருகே வாடகை வீட்டில் பீகாரை சேர்ந்த நீரலாகுமார்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் தங்கி இருந்த அதே அறையில் மேலும் நான்கு பேர் தங்கி இருந்தனர். இதனிடையே நீராலா குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் அருகில் உள்ள அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். கம்பெனியில் நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. அனைவரும் பரிசுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த நிலையில் அந்த பணத்தை வைத்து மது வாங்கி ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது நான்கு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் பேசியதில் வாக்குவாதம் ஏற்பட்டு மற்ற நான்கு நண்பர்களும் சேர்ந்து நீராலா குமாரின் மண்டையில் அடித்து பீர் பாட்டிலை உடைத்து முகத்தில் குத்தியுள்ளனர். இதனால் அவர் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்து அறையில் இருந்து அனைவரும் வெளியே தப்பி சென்று விட்டனர். பிறகு நீண்ட நேரமாக அரை கதவு திறந்திருப்பதை கண்டார் பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

   

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடினர். பிறகு ஆந்திரா பேருந்து நிலையத்திலிருந்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.