நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய முழு நேர அரசியல் களமிறங்கியுள்ளார் கட்சியை தொடங்கி இரண்டு மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடித்தார். இப்போது பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரச்சினை ஏற்பட அதில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்கள். இது குறித்து தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பேசப்பட்டு வருகிறது .
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பிக்பாஸ் வெற்றியாளர் அசீம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உங்களை பார்க்க வந்த கூட்டம் உங்கள் கண்ணு முன்னாடி மூச்சு முட்டி நின்னதை பார்த்தும் ஒன்னும் பண்ணல. ஏர்போர்ட்டில் நிருபர்கள் கேள்வி கேக்குறாங்க அத காதுல வாங்காம புறமுதுகு காட்டிட்டு ஓடுறீங்க. நீங்க எல்லாம் என்ன தலைவர்? விடுங்க என்ன மனுஷன்? நாலு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்.க இதையே எதிர்கொள்ளாத நீங்க சிஎம் ஆகலாம் என்று பகல் கனவு கண்டுகிட்டு இருக்கீங்களே. அப்படியே நீங்க சிஎம் ஆனாலும் இந்த மக்களுக்கு என்ன பண்ணுவீங்க? ஒன்னும் பண்ண மாட்டீங்க. என்று பேசியுள்ளார்.
