தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில் வெளியிட்டு வருகின்றார் இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான நிர்வாகிகளை மாற்றி புதிதாக 35 பேர் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டை விதித்ததால் அவருடைய மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் ஏற்கனவே பறிக்கப்பட்டது.
