கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் விஜயை கைது செய்ய வேண்டுமென நாகை மாவட்டம் பிரதாபராமநாதபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் போஸ்டர் ஒட்டிய நபரிடம் யார் ஒட்ட சொன்னது என கேள்வி கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து பாரத் ராஜ் என்பவர் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தன்னை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே ஒரு கீற்று கொட்டகையில் பரதராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரதராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பரத்ராஜை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்ட கீழையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
