BREAKING: காலையிலேயே பரபரப்பு… கரூர் துயர சம்பவம்… கைது செய்ய விரைந்தது போலீஸ்….!

By Nanthini on ஐப்பசி 2, 2025

Spread the love

கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இதனிடையே முதல் கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சமீபத்தில்  தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தன்னுடைய X தள பக்கத்தில், வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டு பிறகு அதனை நீக்கினார். இது தொடர்பாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

   

இந்நிலையில் கரூர் துயர சம்பவ வழக்கில் தமிழக வெற்றிக்கலகம் பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணைச்செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இருவரை கைது செய்ய முடியவில்லை. நிர்மல் குமார் உதவியாளரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தியது. இருவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்றுக்குள் இருவரையும் கைது செய்ய போலீஸ் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.