ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை. ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐசிஐ இடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் என்றும் ஆனால் ஒரு கண்டிஷன் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறியுள்ளார். மேலும் முறையான விழா ஏற்பாடு செய்தால் மட்டுமே சூர்ய குமார் யாதவ் மற்றும் அவருடைய வீரர்கள் பதக்கங்களை பெறுவார்கள். அங்கு அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் ஏற்பாட்டாளர்களிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இருக்கும் அரசியல் உறவுகளை கருத்தில் கொண்டால் அத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
