தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் நடத்திய போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்ததும் இதுகுறித்து எதுவுமே கூறாமல் விஜய் சென்னைக்கு கிளம்பிவிட்டார். இதனால் விஜய் ஓடி ஒளிந்து விட்டார் என்றும், விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் விஷம பதிவை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதை உடனே நீக்கியும் விட்டார்.
இந்நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசுகையில், 41 பேர் இறந்ததும் ஓடிவிட்டீர்கள். எங்கு சென்றீர்கள்? சாதாரண நிர்வாகிகள் கூட பாதிக்கப்பட்டவர்களை வந்து பார்க்கவில்லை . ஆனால் மாட மாளிகையில் உட்கார்ந்து கொண்டு டுவீட் மட்டும் போடுவீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்
