செந்தில் பாலாஜியை சந்தேகப்படக்கூடாதா..? விஜய் மீது செருப்பு வீசினவங்களை கண்டுபிடிக்கல ஆனா… திமுக அரசை தாக்கிய பிரபல நடிகை..!!

By Soundarya on புரட்டாதி 30, 2025

Spread the love

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த துயர  சம்பவம் தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் தவெக நிர்வாகிகள் ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் யுடியூபர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யூடியூபர் பெலிக்ஸ் கைதானதை நடிகை காயத்ரி ரகுராம் கண்டித்துள்ளார். TVK தலைவர் விஜய் மீது செருப்புகள், கற்களை வீசியவர்களையும், தவெக தொண்டர்களை கத்தியால் தாக்கியவர்களையும் திமுக அரசு கண்டுபிடிக்கல. ஆனால், பேச்சு சுதந்திரம் சார்ந்த கருத்துக்களை தெரிவித்த பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுகவையும், செந்தில் பாலாஜியையும் யாரும் சந்தேகிக்க கூடாதா? திமுகவை எதிர்த்து யாரும் பேசக்கூடாதா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.