கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததியர சம்பவம் தொடர்பாக போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்திற்கு கொடிக்கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரை அதிகாலையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நேற்று கைதான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அவர் அடைக்கலம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
