கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
