தமிழகத்தில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய சிஇஓ-களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
