துபாயில் ஆசிய கோப்பை 2025 இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியானது 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ,ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையிலிருந்து ஆசிய கோப்பை வாங்குவதற்கு இந்திய அணிகள் மறுத்து விட்டார்கள்.
Couldn’t resist sharing 🤣😅🤣#IndiaVsPakistan #AsiaCupFinal#IndianCricket pic.twitter.com/pcQnc0pPRk
— AstroCounselKK 🇮🇳 (@AstroCounselKK) September 28, 2025
இந்நிலையில் பாகிஸ்தானின் தோல்வியை பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். அதாவது மொத்த பாகிஸ்தான் அணியும் ஒன்றாக சென்றாலும், இந்தியாவை வெல்ல முடியாது என்றும், இன்னும் எவ்வளவு காலம் அழ வேண்டும்? என்றும் கேட்கிறார். மேலும், இது ஒரு டீமா என்று கேள்வியெழுப்பிய அவர் இந்தியர்களின் காலணிகளுக்கு கூட சமமானவர்கள் அல்ல என்றும், தங்களுடன் கைகுலுக்காமல் இருப்பது சரியே என்றும் கூறினார்.
