திடீர் திருப்பம்… விஜய்யுடன் பேசிய ராகுல் காந்தி.. செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on புரட்டாதி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் கூட்டத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக விஜயுடன் ராகுல் காந்தி தொலைபேசி மூலமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது பிரச்சாரக் கூட்டத்தில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மன வேதனையில் இருப்பதாக தமிழக வெற்றிக்கழகம் வழக்கறிஞர் அறிவித்திருந்தார். தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசு பொருளாகியுள்ளது.