கரூரில் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர். பிஞ்சு குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பலியான சம்பவம் இந்தியாவையே உறைய வைத்துள்ளது. கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து மாணவர் அமைப்பினர் சென்னை பனையூரில் உள்ள விஜயன் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது வெளியே வா, வெளியே வா, கொலையாளியே வெளியே வா என்ன விஜய்க்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறை, CISF படையினர் விஜய் வீட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
