தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையாற்றி வரும் விஜய், தமிழ்நாட்டுக்கு சத்தான உணவு தரும் ஊர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு உணர்ச்சியையும் ஊட்டும் ஊர் நாமக்கல். தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்று கூறியவர் நாமக்கல் கவிஞர். 5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படும் நாமக்கல்லில் முட்டை கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதுவரை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சியும் முட்டை ஆய்வு கிடங்கு குறித்த கோரிக்கையை நிறைவேற்றியதா என்று விஜய் சரமாரி கேள்வி.
