சென்னை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ரயில்வே கியோஸ்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
மொத்த காலியிடங்கள்: 20
விண்ணப்ப ஆரம்ப நாள்: 23.09.2025
விண்ணப்ப கடைசி நாள்: 07.10.2025
சம்பளம்:18000-28,000
வயது வரம்பு : 42 க்கு மிகாமல்
விண்ணப்பப் படிவத்தை https://chennai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யவும். பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண்:1, புதுத்தெரு, வணிகவளாகம் GCC, முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016, (RTO அலுவலகம் அருகில்).
