BREAKING: தமிழகம் முழுவதும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… காலையிலேயே அலெர்ட்….!

By Nanthini on புரட்டாதி 27, 2025

Spread the love

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் தமிழ்நாட்டின் ஒன்பது துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.