அடுத்த பரபரப்பு… அதிமுகவின் முக்கிய புள்ளியை சந்தித்த நயினார் நாகேந்திரன்…!

By Nanthini on புரட்டாதி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் இபிஎஸ் மீது கட்சியை நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைைய வேண்டும் என கூறி இருந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கூட்டணி வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சி.வி.சண்முகம் உடனான சந்திப்பு ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும் எனவும், டிடிவி தினகரன் மற்றும் இபிஎஸ் விவகாரத்தில் வரும் டிசம்பரில் முடிவு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் புத்தகப் பையில் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் அவல சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதாகவும் அரசை குற்றம் சாட்டியுள்ளார்.