தேனி மாவட்டம் போடி பங்காருசாமி கண்மாய் கரை அருகே இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டனர். இது குறித்து விசாரணையில் இறந்த பெண் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த தங்கையா மகள் பிரவீனா என்பது தெரியவந்தது. விசாரணை நடத்தியதில் தங்கையா தன்னுடைய மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பிரவீனாவுக்கும் உள்ளூரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் பிரவீனா கணவரை பிரிந்து இரண்டாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவரோடு பிரவீனாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இரண்டாவது கணவரை விட்டுவிட்டு அவருடன் செல்ல தயாராக இருந்தது தங்கையாவுக்கு தெரிய வந்தது. மகளின் நடத்தையால் தங்கையாவின் மகன் திருமணம் தடைபட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கையா தன்னுடைய மகளை டூவீலரில் ஏற்றுக்கொண்டு போய் உணவில் விஷமாத்திரை கலந்து கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறார். ஆனால் அது பலனளிக்கவில்லை என்பதால் தன்னுடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
