அந்தரத்தில் தொங்கிய கார்…! அலறி சத்தம் போட்ட 6 பேர்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. பரபரப்பு….!!

By Devi Ramu on புரட்டாதி 26, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பெண்கள் உட்பட கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இவர்கள் நேற்று அதிகாலை வத்தலகுண்டு- கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள் மலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தனியார் விடுதி வழியாக தடுப்பு சுவரில் மோதி மலை சாலையில் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காருக்குள் அலறி சத்தம் போட்ட ஆறு பேரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தியுள்ளனர். கார் தடுப்பை தாண்டி இருந்தால் பள்ளத்தில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 6 பேரும் உயிர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.