திடீரென வீட்டிலிருந்து மாயமான சிறுவன்… மோப்பநாயுடன் வந்த போலீஸ்… வீட்டின் மாடியில் 4 மணி நேரம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் லக்ஷயா பிரதாப் சிங் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுவனின் புகைப்படத்தை அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். Whatsapp குழுக்களில் சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டதோடு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இருந்தாலும் எந்த தகவலும் கிடைக்காததால் மோப்ப நாய்களை வரவழைத்து தேடுதல் பணியை தொடர போலீசார் திட்டமிட்ட நிலையில் டோனி என்ற மோப்பநாய் உடனடியாக வரவழைக்கப்பட்டது. சிறுவனின் சட்டையை அந்த மோப்ப நாயிடம் காண்பித்து தேடிய போது வேகமாக சிறுவனின் வீட்டில் உள்ள மேல் மாடியை நோக்கி நாய் ஓடியது. அங்கு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த ஒரு அறைக்கு முன்பாக நின்று கொண்டு குறைத்தது. இதனைக் கண்டு குழப்பம் அடைந்த போலீசார் பூட்டி இருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது சுமார் 4 மணி நேரமாக தேடப்பட்ட சிறுவன் அங்கு அறையின் ஓரத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

   

பிறகு சிறுவனை எழுப்பி விசாரித்த போது,வீட்டுப் பாடத்தை முடிக்காததால் டியூஷன் வகுப்புக்கு செல்வதற்கு பயந்து போய் யாருக்கும் தெரியாமல் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் ஒளிந்து கொண்டதாக அப்பாவித்தனமாக கூறியுள்ளான். சிறிது நேரத்தில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் மெய்மறந்து அங்கேயே தூங்கி விட்டதாகவும் சிறுவன் கூறியுள்ளான். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் பெற்றோரிடம் சிறுவனை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவம் சற்று நேரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.