அடி தூள்… இனி விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்போருக்கு உதவித்தொகை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 26, 2025

Spread the love

சாலைகளில் விபத்துக்குள்ளான நாய், ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை மீட்டு மருத்துவமனையில் சேர்வோர்க்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது சாலை விபத்துகளில் சிக்குவோரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்போருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனைப் போலவே விபத்தில் சிக்கும் கால்நடைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்க விலங்குகள் நல வாரிய முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.