அடப்பாவமே…! மனைவியை அறையில் வைத்து பூட்டிய புதுமாப்பிள்ளை…. “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான போலீஸ்…. பெரும் சோகம்….!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி கார்த்திகேயனுக்கு ஜெயஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் தனது மனைவியை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு வேறொரு அறையில் இருந்துள்ளார். அப்போது ஜெயஸ்ரீயின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜெயஸ்ரீயை அறையில் இருந்து திறந்து விட்டனர். மற்றொரு அறையை தட்டி பார்த்தபோது கார்த்திகேயன் கதவை திறக்கவில்லை.

   

இதனால் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 20 நாட்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.